சினிமா செய்திகள்
செல்வராகவன் நடிக்கும் பகாசூரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

செல்வராகவன் நடிக்கும் 'பகாசூரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
27 Jan 2023 8:44 PM IST

மோகன் ஜி இயக்கியுள்ள ‘பகாசூரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மோகன் ஜி, அடுத்து இயக்கிய 'திரவுபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது.

இதைத் தொடர்ந்து அடுத்ததாக மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், நட்டி நட்ராஜ், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 'பகாசூரன்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 17-ந்தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்